If you have any feedback on how we can make our new website better please do contact us and we would like to hear from you.
நீங்கள் கானும் கனவுகளை உங்களுக்குள் உதிக்கும் கற்பனைகளை கதைகளாக்கி இங்கே வடிக்க உங்களை அழைக்கின்றோம். மன்னார் இளம் படைப்பாளிகளே தாராளமாக இங்கே எழுதுங்கள்!
தம்பி மூத்தவனாகிறான்!
சிறுகதை எழுதியவர் தேவமதி
மாட்னி ஷோவுக்குப் போக வேண்டுமென்று தம்பி பிரியப்பட் டான். பைக்
ரிப்பேர்டா தம்பி என்று தப்பிக்கப் பார்த்தேன். சைக்கிள்ல போயிருவோம்ண்ணே
என்று ஐடியா கொடுத்தான். “அண்ணா நகர்லயிருந்து மவுன்ட் ரோடு வரக்யும் சைக்கிள மிதிக்யணுமேடா!” “நா வேணா மிதிக்கிறேண்ணே.” “ஒண்ணும் வேணாம். நானே மிதிக்கிறேன். கௌம்பு.” கிளம்பினோம். ஜாலியாய்ப் பின்னால் தொற்றிக் கொண்டான். ஸிக்னல்களில்
சைக்கிள் நிற்கிறபோது தம்பி இறங்கிக் கொள்வ தும், பச்சை விளக்கில் வண்டி
கிளம்புகிற போது தாவிப் பின்னால் உட்கார்ந்து கொள்வதுமாயிருந்தான்.
ஈகா
தியேட்டர் ஸிக்னலில் நான் காலூன்றி நின்றபோது, நம்ம சைக்கிளையடுத்து ஒரு
கை வண்டிக்காரன். வேகாத வெயிலில், செருப்பில்லாத கால்களைத் தகிக்கிற
தார்ச் சாலையில் பதித்து நிற்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஒரு
காலை ஊன்றி நின்று மறுகாலுக்குத் தற்காலிகமாய்க் கொஞ்சம் ஆறுதலளிப்பதும்,
பிறகு இந்தக் காலை ஊன்றி அடுத்த காலை உயர்த்திக் கொள்வதுமாய் அவன்
அவதிப்பட்டுக் கொண்டி ருந்ததை அவதானித்த போது, இவனுக்கு ஒரு ஜோடி செருப்பு
வாங்கிக் கொடுக்க முடிந்தால் எவ்வளவு புண்ணியமாயிருக்கும் என்று
தோண்டிறியது.
போகிற பாதையில் ப்ளாட்ஃபாம் செருப்புக் கடைகள்
இருக்கும். ரப்பர்ச் செருப்பு மிஞ்சிப் போனால் முப்பது ரூபாய் இருக்கும்.
ரெண்டு பேர் சினிமாவுக்கு செலவழிக்கப் போவ தில் நாலில் ஒரு பங்கு.சேத்துப் பட்டு பாலம் ஏறி இறங்கியதுமே ஒரு செருப்புக் கடை கண்ணில் பட்டது. தம்பி, கொஞ்சம் எறங் குடா என்றேன். “ஏண்ணே, வீல்ல காத்து இல்லியா?” “அதில்லடா, நாம ஸிக்னல்ல நின்னுட்டிருப்ப, பக்கத்துல ஒரு கை வண்டிக்காரன் நின்னுட்டிருந்தானே, கவனிச்சியா!” “ஆமா, அவனுக்கென்ன?” “பாவம்டா
அவன், கால்ல செருப்பில்லாம, வெயில்ல நிக்ய முடி யாமத்
துடிச்சிட்டிருந்தான். அவனுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங் கிக்
குடுத்துட்டுப் போவோம்டா.” படத்துக்கு லேட்டாயிருச்சுண்ணே. நேரா
வண்டிய வுடு. செருப்பு கிருப்பெல்லாம் இப்ப வாங்க வேண்டாம் என்று
பின்னாலிருந்து இடித்தான் தம்பி. தம்பியின் இரக்கமின்மை எனக்கு ஏமாற்றமாயி ருந்தது. கோபமாயும். கோபத்தை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை ஓரங்கட்ட முற்பட்டேன். “சினிமாவுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டாப் போனா ஃபைன் ஒண்ணும் போட மாட்டாண்டா. கொஞ்சம் எறங்கு.” “சொன்னாக் கேளுண்ணா, செருப்பெல்லாம் வாங்க வேண்டாம். வண்டிய வுடு.” என்
கோபம் கரை கடக்கப் பார்த்தது. “என்னடா தம்பி நீ, இப்படி மனிதாபிமானமே
இல்லாம இருக்கியேடா, கஷ்டப் படறவங்களுக்கு நம்மாலான ஹெல்ப் பண்ணலன்னா
நம்மல்லாம் என்னடா மனுஷங்க! சொல்றத கேளுடா. எறங் குடா.” “நா சொல்றத நீ கேளுண்ணா, வண்டிய நிறுத்தாம ஓட்டு. அவனுக்குப் புதுச் செருப்பு தேவையில்லை.” அவனுடைய
பிடிவாதத்துக்குப் பணிந்து, சைக்கிளை வேண்டா வெறுப்பாய் அழுத்தினேன்,
“திரும்பத் திரும்ப அதத்தானடா சொல்ற. என்னடா தம்பி நீ இவ்ளோ மோசமாயிருக்க”
என்று என்னுடைய வெறுப்பு க்கு ஒரு சொல் வடிவம் கொடுத்தபடி. முதுகுக்குப்
பின்னால் தம்பியின் குரல் பொறுமையாய்க் கேட்டது. “ஸிக்னல்ல நிக்கி றப்ப
என்னோட செருப்பக் கழட்டி அவனுக்குக் குடுத்துட் டேண்ணே.” ahTk; fw;giz
சித்திரமே சித்திரமே சிந்தனை செய்! யுகபாரதி
என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா
அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றேன்னு பாரு' மனதிற்குள்
கறுவியபடி வராண் டாவைத் தாண்டிக் கொண்டிருந்தான் சுனில். சுனில்
திருமணமா னவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவி யக்
கண்காட்சியில் பார்த்து, அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடி த்துப்போய்,
பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில்
ப்ராஜெக்ட். தற்போது, இருவரும் கென்யா நாட்டில். சுனிலின்
தற்போதைய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட
காட்சிதான்.அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். வழக்கமாய்
அந்நேரம் அவன் ஆபீஸில்தான் இருப்பான். அவளும்தான். அன்று தான் எடு க்க
மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன் னல் வழியே கண்ட
காட்சியில் வந்த துவேஷம்தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய்
திரைச்சீலையால் மூடிக் கிட ந்த பெட்ரூமில் மது ஒரு கருப்பனோடு கட்டித்
தழுவிக் கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளி யில்
சில நொடிகளே அவன் பார்த்தாலும் அவனை உலுக்கியெடு த்துவிட்டது.உடனே
அவளைக் கொன்று போடத் தோன்றியது. துரோகம் செய்தவளுடன் இனி வாழ்க்கை இல்லை.
அவளுக்குத் தண்டனை சாவுதான். தான் இதில் சம்பந்தப்பட்டு விடாமல் அவ ளைக்
காலி செய்ய வேண்டும். நிமிட நேரத்திற்குள் அவன் மூளை கிரிமினலாக வேலை
செய்தது. உடனே ஆபீஸ் திரும்பினான். திரும்பும் வழி முழுதும் அவளை எப்படிக்
கொல்லலாம் என்றே சிந்தனை போனது.வரும் வழியில் அடுக்கு மாடிக்
கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சுனில் மனதில் ஒரு மின்னல்
வெட்டியது. மெல்ல அந்த கட்டிடம் முழுக்க சுற்றிப் பார்த்தான். கைதேர்ந்த
கொலைகாரனைப் போல மனம் வேலை செய்தது. ஆபீஸில் வேலையில் மனம் செல்லவில்லை.
பேச்சிலராகச் சுற்றித் திரிந்த காலத்தில் விளையாட்டாய்ப் பழகிய துப்பாக்கி
நினைவுக்கு வந் தது. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக்
சமாசாரங்க ளுடனும் சில புல்லட்களுடனும் ப்ளான் ரெடி. சாயந்திரம் 5
மணி க்கே வீட்டிற்குக் கிளம்பிவிட்டான். முதலில் அந்த அடுக்கு மாடிக்
கட்டிடத்தில் இரண்டாவது மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவன்
வீட்டு பெட்ரூம் தெரிந்தது. லாவகமாய் ஒரு டைமருடன், மறக்காமல்
சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமேட்டிக் காக வேலை செய்வதுபோல் செட்
செய்தான். கட்டிடம் கட்டுகிறா ர்கள். சுவர் வேலை நடக்கிறது. நாளை பொழுது
விடிந்ததும் சுவர் வைத்து விடுவார்கள். ராத்திரி அவள் சன்னலோரம்
படுத்திருப் பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள்
மெளனமாக செத்துப் போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது.
உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத்
தொடங்கிவிடுவார்கள். எப்படி யும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி
நேரம் ஆகும். அதற்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிரு ந்த
இடத்தை மறைத்து விடும். போலீஸ் வந்து பார்த்தால் சின்ன க்ளூ கூட
கிடைக்காது. தானும் இந்த 12 மணி நேரம் வெளியில் இருப்பதற்கு ஆதாரம் தயார்
செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்பர். மடமடவென காரியம் முடித்தான்.
நண்பனுடன் பார்ட்டி என்று மதுவுக்கு செய்தி அனுப்பிவிட்டு நண்பன்
வீட்டுக்குச் சென் று விட்டான்.இரவு அவனுக்கு நீளமானதாகக்
கழிந்தது. நன்றாகக் குடித்திருந்த நண்பன் எழுந்திருக்க நேரமாகும். காலை 5
மணிக்கே புறப்பட்டான். அவள் சாவதைப் பார்த்து ரசித்துவிட்டு சத்தமில்லா மல்
திரும்பிவிட வேண்டும். போலீஸ் கேட்டால் அவன் நண்பன் தான் சாட்சி. மணி 5:56. சத்தமில்லாமல்
அவன் ஃப்ளாட்டை நெருங்கினான். 5:59:59 மணி வரை குண்டு பாயாது. சாகும் முன்
கடைசியாக அவளை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.
5:59:59 க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு நகர்ந்து விட வேண்டும். அவள்
செத்ததும் மறக்காமல் அந்தத் துப்பாக்கியையும் அகற்றி விட வேண்டும். அக்கம்
பக்கம் பார்த்தான். மணி 5:58:45 மெல்ல காரிடார் தாண்டி
சன்னலை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த
விடிகாலையிலும் முன்தி னம் பார்த்தது போல் அவள் அந்த கருப்பனுடன்
கட்டிப்பிடித்து படுத்திருந்தாள். மணி 5:59:15 அடிப்பாவி, இன்றுமா?அவனுக்கு
ஏதோ வித்தியாசமாய்ப் பட்டது. இவர்கள் ஏன் நேற்று பார்த்த அதே போஸில்
படுத்திருக்கிறார்கள். அதுவும் இம்மிகூட ஆடாமல் அசையாமல். சற்றே மனம்
குழம் பியது. அதே நேரம் ஹாலில் யாரோ இருப்பது போல் தோன்ற அங்கே பார்த்தான்.மது
எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். எனில் இது யார்? மீண்டும்
படுக்கையைப் பார்த்தான். மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல
பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது. அது வண்ணங்களால் வரைந்தெடு க்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. மது 3டி ஓவியங்கள் வரைவதில் கில்லாடி என்பது நினைவுக்கு வந்தது.
வெளிச்சம் பரவப் பரவ, அந்த ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து
கொண்டிருந்தது. இருவர், அரை நிர்வாணமாய். ஒன்று மது, மற்றொன்று,
கருப்ப னல்ல! வெளிச்சத்தில் அது தன்னைப் போலவே இருந்தது. இரு ளில் கருப்பாய்
தெரிந்திருக்கிறது. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது.
விரிப்பின் வலது ஓரம் பளிச்சிட்டது அந்த வாசகம் 'ஹாப்பி பர்த்டே, சுனில்'.
சுனிலின் மூளை நினைவடு க்குகளில் அவன் பிறந்த நாளை தேடிக்கொண்டிருந்த
நேரத்தில்.... மணி 6:00..... ப்ளப்...சுனில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தான், மண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வழியே ரத்தம் குபுகுபு வென வந்துகொண்டிருந்தது. யாவும் சும்மா கற்பனைதான்!