candil  
Dudson Camila (14 July 1990 - 23 July 2010). He is the youngest son of Edward Stephen and Theresa Concy and the yonger brother of Hudson and Nancy.
(Dindigul, Tamil Nadu, India)
 dudson2amma2                                       










amma3












723_sunset   Love_kiss4      ஆஹா என்ன பொருத்தம்?
BDAYWISH                         

உங்கள் மழலைகளின் பிற ந்த நாள்வாழ்த்துக்களை பிரசுரித்து மகிழுக!
ninaivukal




திருமணம் போன்ற நினைவுகளை இங்கே மீட்கலாம்


SLflag
 
 
            பேசாலை Pesalai
our_church

















இது பேசாலை மக்களின்
             இணையத்தளப்பக்கம்
Pesalai Face book vist your Pesalai friends here  http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100001231604110&ref=ts
இணயத்தள வாழ்த்துக்கள் Bro, Jegan47302_123259881058398_100001231604110_150376_1402901_n





பேசாலை

பேசாலை புனித ஸ்நாபக அருளப்பர் மன்றம் தனது 40தாவது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஞாயிற்றுக் கிழமை (29 August 2010) திருப்பலியுடன் கொண்டாடியது. விழாத் திருப்பலியை புனித ஸ்நாபக அருளப்பர் மன்றத்தின் ஸ்தாபகர் அருட்திரு லூயிஸ் பொன்னையா அ.ம.தி. அவர்கள் ஒப்புகொடுத்தார். திருப்பலியின் முடிவில் ஸ்நாபக அருளப்பர் மன்றத்தினால் பேசாலை லூர்து பாட்டில் புதிதாக கட்டப்பட்ட தங்குமிடம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
 

Pesalai பேசாலை Invitation for the Diaconate of Bro. Jegan on 2 Septermer 2010 at St. Joseph's Chapel in Columbuthurai, Jaffna


Pesalai பேசாலை அன்புள்ள பேசாலை சகோதரர்களே,
எமது ஊரின் மகன் அருட்சகோதரர் டேவின் இன்று (16 ஆகஸ்ட்) IVD சபையில் தனது நித்திய வாக்குறுதியை பெறவிருகிறார். இவர் அருட்சகோதரர் ஜெகன் அவர்களின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது

இடம்: கண்டி அம்பிட்டிய IVD பெரிய குருமடம்

...காலம்: 16 August 7 p.m.

அவரது பணிவாழ்வு சிறக்க வெற்றி அன்னையை பிராத்திப்போம


புலத்தில் வாழும் பேசாலைப்பெருமக்களே!
வெளிநாட்டில் ஏறக்குறைய 40 குடும்பங்கள் உள்ளனர் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 10 யூரோ சேகரித்தால் கிட்டத்தட்ட 400 யூரோ அதாவது அண்னளவாக 75000 ரூபாக்களை பேசாலை ஏழைமாணவர்களின் கல்விக்கு அல்லது பேசாலை சமூகநலத்திட்டத்திற்கு பங்குச்சபையூடாக செயல்பட முடியும் என நினைக்கின்றேன்.நிதியை நேரடியாக பங்குச்சபைக்கு தனிப்பட்ட ரீதியாகவும் அனு ப்பிவிட்டு விபரங்களை இணையத்தளத்திற்கு அறிவிக்கலாம் அல்லது இணையத்தளம் பங்குச்சபையோடு தொடர்பு கொண்டு நிலமைகளை அவ்வப்போது வெளிவிடும். நிதிபற்றிய விபரங்கள் பங்களித்தவர்கள் விபரங்களை இணயத்தளம் அவ்வப்போது வெளிவிடும் இதுபற்றிய உங்கள் அபிப்பிராயங்களை தெரியப்படுத்த Thevethas@hotmail.com, mannar@mannarweb.com, அல்லது 004792278528 SMS ஊடாக அல்லது நேரில் தொலைபேசி வழியாக 004721389858 தொடர்பு கொள்ளவும். நன்றி

பேசாலை நாயகியே பாடலை பார்த்து கேட்டு இரசிக்க
இங்கே அமிழ்த்துக
பேசாலையின் மாபெறும் கலைப்பெட்டகம் உடக்கு பாஸ் Passo  காண்பதற்குஇங்கே முயற்ச்சி செய்க! இது பேசாலை பொறியியலாளர் திரு, சுரேஸ் மிராண்டா அவர்களின் படப்பிடிப்பில் உருவானது
அமரர் உயர்திரு அதிபர் பங்கிராஸ் அவர்களின் நினைவு இணையத்தளம்இங்கே காண்க!


அறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்


My_school














இதுதான் பேசாலை மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிராதான மண்டபத்தின் நுழை வாயில்! இதன் வலது பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம் பின்னாளிலே தொழிலதிபராக இருந்து மறைந்த திரு, வெலிச்சோர் ஞானப்பிரகசம் டயஸ் அவர்களினால் நிர்மானிக்கப்பட்டது. பேசாலை மகாவித்தியாலயமனது தற்போது பல பெரிய கட்டிடங்களையும் பிரமாண்டமான
 விளையாட்டுத்திடலையும் அரங்க மேடைகளோடு கம்பீரமாகத்திகழ்கின்றது! அறிவொளி அளித்துலகளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம் என்று காலைவெயில் முகத்தில் சுழிரென்று சுட, கூசும் கண்களோடு பாட சாலைக்கீதத்தை பாடும் போது இனம்புரியா சந்தோசம் மனதில் குடிகொள்ளும். அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவர் அன்றைய நாளுக்குரிய புத்திமதிகளையும் ஆலோசனை களயும் வழங்குவார். ஒவ்வொரு ஆசானும் தெய்வங்களக
எமக்குத்தெரிவார்கள் உண்மையும் அதுதான்! அப்படி தெய்வமாக் எனக்குத்தென்பட்ட ஒரு சிலர் ஆசிரியை திருமதி ஜெகநாதன், தலைமை ஆசிரியர் திரு சாமிநாதன், திரு, முகுத்தார் இப்படிப்பலர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளி வாழ்க்கை அற்புதமான காலங்களாகும். அதனைச் சொல்லும் பாணியானது சேரனின்அல்பம், பாலுமகேந்திராவின் அழியாதகோலங்கள் போன்ற திரைப்படங்களாக மனதில் விரியும். உங்களுக்கும் உங்கள் பாடசாலை பற்றிய நினைவுகள் மலருகின்றதா? அப்படியானால் அதனை பகிர்ந்து கொள்ளலாமே!

அமரர் அறிவுலக அப்பா உயர்திரு துரம் மாஸ்டர் அவர்களின் நினைவு மடல் இங்கே வாசியுங்கள்
அலோசியஸ் டயஸ் மாஸ்டர் ஒரு நினவுப்பொறி இங்கே அமிழ்த்துக!

வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

[தொகு] கதைச் சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வாடைக்காற்று திரைப்படத்தின் ஒரு காட்சி

வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.

மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.

ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.

[தொகு] சுவையான சில குறிப்புகள்

  • 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
  • இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
  • வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர். இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • 'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
  • பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தில் 'யோக்ம்' பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர், 'அப்புக்குட்டி' ரி. ராஜகோபால், அருட்பிதா. கரவையூர்ச் செல்வம் ஆகியோரே அவர்கள்.
  • வீரகேசரிப் பிரசுரங்களான செங்கை ஆழியானின் வாடைக் காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவுசெய்து தரும்படி, இயக்குனர் பாலு மகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாசன் கேட்டபொழுது, நிலக்கிளி நாவலில் வரும் 'பதஞ்சலி' பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. 'வாடைக்காற்றை' இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம்" என்றார் பாலு மகேந்திரா.









 
 
  Site Map