புதன், 01 செப்டம்பர் 2010 10:04 15 வயதுச் சிறுமியை கூட்டாக பாலியல்
தொல்லைக்கு உட்படுத்தினர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை
எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று மன்னார்
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மன்னார் நகரத்தில் அமைந்திருக்கும்
பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 29 ஆம் திகதி மாலை நேரம் பஸ்ஸிற்காக
காத்திருந்த சிறுமியை அங்குள்ள மலசல கூடத்துக்குக் கொண்டு சென்று பாலியல்
தொல்லை செய்தனர் என்று இம்மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.இம்மூவரையும் சம்பவ தினம் கைது
செய்தவர்களான மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவ்வழக்கைத் தாக்கல்
செய்துள்ளனர். மன்னார் நீதிவான் கே.ஜீவராணி சந்தேகநபர்களை விளக்கமறியலில்
வைக்கின்றமைக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
15 வயதுச் சிறுமி ஒருவரைக் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த
முயற்ச்சி!
சிறுமியை கூட்டாக பலாத்காரமா பலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றமை தொடர்பாக இளைஞர்கள் நால்வர் மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாரால்
இன்று மாலை கைது செய்யப்பட் டுள்ளார்கள்.இச்சிறுமி மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் 4.30 மணியளவில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கின்றார்.அப்போது
இந்த இளைஞர்களில் அவரை பலவந்தமாக பேரூந்து நிலையத்தின் மலசல கூடத்துக்கு
கொண்டு சென்றனர். சிறுமியின் ஆடைகளைக் களைந் தனர். கையடக்கத் தொலைபேசி
மூலம் அவரின் நிர்வாணக் கோலத்தை படம் பிடித்தனர்.பின் கூட்டாகக்
கற்பழிக்க முயன்றனர். இந்நிலையில் சிறுமி பெரிதாக சத்தம் போட்டு
அழுதிருக்கின்றார். அச்சுற்றாடலில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர்
இந்த அசமாத்தம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாருக்குத் தகவல்
வழங்கினார்.அந்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் சிறுமியைக்
காப்பாற்றியமையுடன் மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். இம்மூவருக்கும்
உதவி, ஒத்தாசை செய்த இன்னொரு இளைஞன் சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்
அடிப்படை யில் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமி மருத்துவ
பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்கள்
நால்வருக்கும் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
முருங்கனில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது! முருங்கன் சூரியகட்டை கிராமத்தில் பொலிஸார் போல சோதிக்கச்சென்று 32 இலட்சம் பணத்தை கொள்ளையர் கொளையடித்துள்ளனர். இது பற்றிய விசாரணைகள் மன்னார் பொலிஸாரால் முடுக்கிவிடப்பட்டு ளது. இனந்தெரியா சடலம் மன்னாரில் மன்னார் கடற்கரையில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. ஆனால் இது வரை யாரும் சடலத்திற்கு உரிமை கோரவில்லை பொலிசார் இது பற்றி மேலதிக விசாரணைகள் நடத்துகின்றனர். மன்னார் மூர்வீதி கடற்கரையில் இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது கிட்டத்தட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்கதாக சடலம் உள்ளது.
பேசாலைவில் வீதி விபத்து சிறுவன் பரிதாப மரணம்!வினோத் என்று அழைக்கப்படும் பாடசாலைச்சிறுவன் சைக்கில் சவாரிசெய்யும்போது வந்த வாகனத்தில் மோதி இறந்துள்ளார் இவர் தொட்டம்மா அவர்களின் புதல்வனாவார்.
மதவாச்சி தலைமன்னார் ரயில் சேவை மீளமைப்பு
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது
தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.
மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை
நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள
உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா
சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக
அமைச்சு கூறியது. இந்நிகழ்வு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளது.
மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையி லான ரயில் பாதை புலிகளினால் தகர்க்க
ப்பட்டதையடுத்து ரயில் சேவைகள் 1990 ஜூன் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டது.
ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளன.
மதவாச்சியில் இருந்து மடு வரை யான 43 கிலோ மீட்டர் தூர பாதை முதல்
கட்டமாகவும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை இரண்டாம்
கட்டமாகவும் நிர்மாணிக்கப் படும். இதன்போது 5 பிரதான ரயில் நிலையங்களும், 5
உப ரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மாதோட்டம், திருக்கேதீஸ்வரம்,
நேரியகுளம் உட்பட ஐந்து இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்ப
ட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை
நிர்மாணிப்பது தொடர்பாக இந்திய பொறியியலாளர் குழு கடந்த நாட்களில்
அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்ப தற்காக புலிகளினால் எடுத்துச்செல்லப்ப
ட்டன. இதனால் புதிதாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி
கூறினார். இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும்
மீளமைக்கப்பட உள்ளது. வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை
நிறைவடையும் நிலையில் உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும் பணிகள்
முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச மனித நேய தினம் இன்று நாடளாவிய
ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. இதன் ஓர் அங்கமாக மன்னாரிலும் மிகவும்
சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும்,
அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள்
மேற்படி நிகழ்வினை நடத்தின.இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச
சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான
பணியாளர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம்
மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும்
நினைவு கூர்ந்தனர்.இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய
நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன்,மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி
வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள்
உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தலைமன்னார்இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும் : -இந்திய உயர்ஸ்தானிகர்-
திகதி:16.08.2010,
இந்தியாஇலங்கை இடையேயான பாரம்பரிய தொடர்புகளை மீளவலுப்படுத்துவதன்
ஒரு கட்டமாக கொழும்புதூத்துக்குடி, தலைமன்னார்இராமேஸ்வரத்திற்கும் இடையில்
பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகர்
அசோக் கே காந்தா தெரிவித்தார்
64 ஆவது இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள இந்திய
இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது இந்திய தேசியக்
கொடியேற்றி ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் சுதந்திர தின உரையினை
வாசித்தபின்னர் இந்தியஇலங்கை உறவு குறித்து உரை நிகழ்த்துகையிலேயே
உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் கூறியதாவது;
இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிவந்த உள்நாட்டு
மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கையுடனான எமது
உறவு தற்பொழுது ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளது.
இத்தருணத்தினைத்தான் நாம் பற்றியிருக்க வேண்டும்.
அத்துடன் ஆயுதமோதல்களினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த இரு
நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்புகளை மீளக்கட்டியெழுப்பவும் நாம்
முயற்சியினை மேற்கொண்டுள்ளோம்.
இதனடிப்படையில் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு இடையிலும்
தலைமன்னாரிற்கும் இராமேஸ்வரத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில்
ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் இரு நாடுகளிடையேயும் மின்வளத்தை பரிமாறிக் கொள்வது குறித்தும் ஆராயப்படுகின்றது.
மக்களின் சேவையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் திறக்கப்படும்.
இவ்வாறாக பல திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் இலங்கையுடனான
எமது உறவில் அசாதாரண வாய்ப்புகளை பயன்படுத்துவதற்குரிய விசேட தருணம்
இதுவெனத் தெரிவித்தார்.
பேசாலை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம்! பேசாலையில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள கொன்சி டயஸ் அவர்களின் கடைசிப்புதல்வனே இவ்வாறு மரணம் அடைந்துள்ளார். இவர் ரூசியாவில் மருத்துவம் இரண்டாம் வருடம் நிறைவுசெய்து விடுமுறைக்காக இந்தியா செல்ல இருந்தவேளை நண்பர்களுடன் ஆறி லே குளிக்கச்சென்றவர் நீரிலே மூழ்கி மரணமடைந்துள்ளார். இவரின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கழுதைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் ஒன்றை மன்னார் பிரதேச செயலகம் முன்னெடுக்க உள்ளது.
பிரதேச செயலாளர் நந்தினி ஸ்ரான்டீமேல் இத்திட்டத்தைமுன்னின்றுநடத்துகின்றார். சலவைத் தொழிலாளர்களால் பொதி சுமக்கும் பிராணிகளாக பயன்படுத்தப்பட்டு வந்த கழுதைகள் தற்போதுமுற்றாகக்கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில்இவைபேரூந்துநிலையங்கள், சந்தைத் தொகுதிகள்,பாடசாலைகள் , கோயில்கள் ,தெரு வீதிகள் போன்ற
இடங்களில் எல்லாம் அநாதரவாகத் திரிந்து வருகின்றன.அத்துடன் பல்கிப்
பெருகியும் விட்டன.இவை தெருக்களை அசுத்தம்செய்துவிடுகின்றன.வீதி விபத்துக்களை யும் ஏற்படுத்துகின்றன. இச்சூழ்நிலையிலேயே
இக்கழுதைகளுக்குமறுவாழ்வுவழங்குவ தற்காக இவற்றை கணக் கெடுப்புச் செய்ய
வேண்டும் என்று கிராம சேவையாளர்களுக்குப் பிரதேச செயலாளர்
உத்தரவிட்டுள்ளார்.
மன்னாரில் காலாவதியான பொருட்களை விற்பனை
செய்தல் மற்றும் விலைப்பட்டியலை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை
செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுமார் 48வியாபாரிகள் கைது
செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
செயப்பட்டனர்.வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில்
இருந்து மன்னாருக்கு வந்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலர்கள்
மன்னாரில் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது மேற்படி 48
வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய
போது மன்னார் மாவட்ட நீதவான் திருமதி. ஜீவராணி குற்றவாளிகளிடம் இருந்து
2000 ரூபா முதல் 10000 ரூபாய் வரை தண்டப்பணமாக அறவிடுமாறு உத்தரவிட்டார்.48வியாபாரிகளிடம் இருந்தும் சுமார் 2 இலட்சத்து 45ஆயிரம் ரூபாய் வரை அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, மன்னார் பகுதிகளில்
பனங்கள்ளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைத் தொடர்ந்துயாழ்ப்பாணத்திலிருந்து
போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள்ளை அங்குகொண்டுசென்று
சந்தைப்படுத்து வதற்கு பனை அபிவிருத்தி சபையின் தலைவர் ப. சீவரத்தினம்
நடவடிக்கை எடுத்துள்ளார்.யாழ்ப்பாணச் பனை அபிவிருத்தி சங்கங்கள்
பருவ காலங்களில் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் கள்ளை போத்தலில் அடைத்து
தட்டுப்பாடான காலங்களில் அவற்றைச் சந்தைப்படுத்துவது வழக்கமாகும்.இவ்வாறு போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு
பண்டத்தரிப்பு பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் ஒரு லட்சத்து
25 ஆயிரம் போத்தல்கள் வரை தேங்கி உள்ளதாகவும், ஏனைய சங்கங்களிலும் இவ்வாறு
தேங்கிக் கிடப்பதாகவும் அவற்றை யாழ். மாவட்டத்துக்கு வெளியே எடுத்துச்
சென்று சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ப.
சீவரத்தினம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பிரதான
வீதியின் 2 ஆம் கட்டைச் சந்தியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில்
முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களினால் நேற்று
இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.மன்னாரின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சண்டே
ரைம்ஸ் மற்றும் டெய்லிமிரர் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளரான பி. ஏ
அந்தோனிமார்க் (வயது 67)என்பவரே இனந்தெரியாத நபர்களால்
தாக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் தப்பிச் சென்றும் விட்டார்கள்.
மன்னார் பனங்கட்டுக்கோட்டுப் பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த பாலை மீன் மற்றும் நண்டு வளர்ப்புத் தடாகம் திறந்து
வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு வலைகள்
வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீள் எழுச்சி
திட்டத்தினால் வழங்கப்பட்ட கடன் உதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறு
கைத்தொழில் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மகிந்த சிந்தனையின்
அடிப்படையில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்துக்கு அமைய பொருளாதார
அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட மீள் எழுச்சி திட்ட பயிற்சி
நிலையமும் திறந்துவைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வுகள் பனங்கட்டுக்கோட்டு
கிழக்கு கிராமத்தில் இடம்பெற்றது. இதன் போது ஆசிய அபிவிருத்தி நிதி
வழங்குனர்கள் ,மன்னார் அரசாங்க அதிபர் எ.நிக்கொலாஸ் பிள்ளை,மன்னார்
பிரேதேச செயலாளர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்
பலர் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வானது மகிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளமை குறிபிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல்
மிகவும் தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில் அது தொடர்பான தொடர்பான அவசரக்
கூட்டம் ஒன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலாளர்
திருமதி.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.இதன் போது மன்னார் நகரசபை அதிகாரிகள்,பொது
சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,சுகாதார திணைக்கள அதிகாரிகள் என
பலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் பிரதேச செயலாளர் திருமதி,ஸ்ரான்லி
டிமேல் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையில், மக்களின் அறியாமை காரணமாகவே
டெங்கு நோய் பரவி வருகிறது என்றும் இதனாலேயே அதிகமானவர்கள் டெங்கு நோயால்
பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 74
டெங்கு நோயாளர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும்
எனவே மன்னார் மக்கள் மத்தியில் நாம் தொடர்ந்தும் டெங்கு விழிப்புணர்வுகள்
நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெரிய பண்டிவிரிச்சானைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த
357 பேர் மீள்குடியமர்வு..!
வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் தங்யிருந்த பெரிய
பண்டிவிரிச்சானைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் நேற்று
அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர்
மில்ரோய் பெர்னாந்து தெரிவித்துள்ளார். மெனிக்பாமிலிருந்து பெரிய
பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களில்
மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டிருப்பதாகவும்
அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசாங்கத்தால் ஆறுமாதத்துக்கு
வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேசாலை பெண்கள் பாடசாலையில் சிரமதானம்! நேற்று 04 ஜூலை பேசாலை பெற்றோர்கள் சிரமதானப்பணியில் ஈடுபட்டு பெண்கள் பாடசாலைக்கு சமையலறையை செப்பனிட்டுக்கொடுத்துள்ளனர். அண்மைக்காலமாக கல்வியிலே மன்னார் மாவட்டத்திலே பேசாலைக்கிராமம் சாதனை படைத்து வருகின்றது இதற்கு காரணம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆலயம் என்பன உறுதுணையாக இருக்கின்றது. தகவல் அசோக் பெர்ணாண்டோ
மன்னார் - வவுனியா இரவு பஸ் சேவையின்றி பயணிகள் அவதி _
மன்னாரில்
சகல அரச பஸ்களும் இரவு சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் மன்னார் -
வவுனியா இடையேயான போக்குவரத்து சேவை மட்டும் மாலை 5.30 மணியுடன்
நிறுத்தப்படுகின்றது.
நாட்டின் வட பகுதிகளில் ஒன்றான வன்னி
மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்குth திரும்பியிருக்கின்ற போதும்,
மன்னாரில் இருந்து வவுனியாவுக்கான பஸ் போக்குவரத்து மாலை நேரத்துடன்
மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனால் பயணிகள் தமது கடமைகளை முடித்தக் கொண்டு இருப்பிடங்களுக்குச் செல்வதற்குப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேவேளை,
மன்னாரிலிருந்து கொழும்புக்கு ரயிலில் செல்ல விரும்பும் பயணிகள், வவுனியா
சென்றே இரவு யாழ்தேவியில் தமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இதற்காக
அவர்கள் பலமணி நேரம் முன்னதாகவே வவுனியா செல்ல வேண்டியிருக்கின்றது இதனால்
அவர்கள் பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
மன்னாரில்
இரவில் மூன்று தனியார் பஸ்களும் ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்ஸும் ஒரு
அரச பஸ்ஸும் நள்ளிரவு 12.00 மணிவரை மதவாச்சியூடாக கொழும்பு சேவையில்
ஈடுபடுகின்றன. இச்சேவையூடாக வவுனியா செல்ல வேண்டுமாயின் மதவாச்சி சென்றே
அங்கிருந்து வவுனியா செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே மன்னார் - வவுனியா
இரவு நேர பஸ் சேவை ஒன்றை ஆரம்பித்து மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை
நிவர்த்தி செய்யுமாறு கோரப்படுகின்றது
மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தொடருந்துப் பாதை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
மடு - தலைமன்னார் தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான
உடன்பாடு அண்மையில் புதுடெல்லியில் கையெழுத்திடப்பட்டது. இந்தப் பாதை
அமைக்கும் பணிக்கு 150 மில்லியன் டொலர் செலவாகும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
63 கி.மீற்றர் நீளமுடைய இந்தத் தொடருந்துப்
பாதை அமைப்பு வேலைகள் இரண்டு வருடங்களுக்குள் முடிந்து விடும் என்று
சிறிலங்கா தொடருந்துத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக தொடருந்துப் பாதைகள், பாலங்கள் மற்றும் தொடருந்து நிலைய மேடைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தத்
திட்டத்தின் கீழ் முருங்கன், மன்னார், பேசாலை, தலைமன்னார், தலைமன்னார்
இறங்குதுறை ஆகிய இடங்களில் பிரதான தொடருந்து நிலையங்களும், மாதோட்டம்,
திருக்கேதீஸ்வரம், தோட்டவெளி ஆகிய இடங்களில் துணை தொட,ருந்து நிலையங்களும்
அமைக்கப்படவுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 16 டெங்கு நோயாளர்கள்
இனங்காணப்பட்டிருப்பதாகவும் அவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிய வருகின்றது.
உப்புக்குளம், மூர்வீதி, பள்ளிமுனை ஆகிய
பகுதிகளைச் சேர்ந்தோர் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்
மாவட்டத்தில் டெங்கு அச்சம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தப்
பரிசோதனை செய்வதற்காக நாளாந்தம் வருகை தருவதாக வைத்தியசாலையின் சுகாதார
பிரதிப் பணிப்பாளர் தெரிவிக்கிறார்.
டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு
நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விசேட வைத்திய நிபுணர் குழுவொன்றை
நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் அருகே சர்ச்சில் தரைதளத்தில் பதித்த டைல்சில் இயேசு, மாதா உருவங்கள் தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வீடியோ பார்க்கவும் ராமேஸ்வரம்
தங்கச்சிமடம் அற்புத குழந்தையேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி
திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு
நடத்தி வருகின்றனர். நேற்று இரவு இப்பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன்
வழிபாடு நடத்த சென்றார். அமைதியான சூழலில் ஜனார்த்தனன் மனமுருகி
பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். சர்ச்சில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பிரார்த்தனை
முடித்து அவர் கண்விழித்து பார்த்த போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த
தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி
வந்து சென்றன. இதனை முதலில் மாயை என நினைத்தார். ஆனால் இந்த நிகழ்வு
தொடர்ந்து கொண்டே இருந்தன. இதைப்பார்த்து அதிசயித்த மாணவர் ஜனார்த்தனன்
ஓடிச்சென்று அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை
பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த அதிசய நிகழ்வைப்
பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
இத்தகவல் ராமேஸ்வரம் முழுவதும்
காட்டுத்தீ போல பரவியது. அதனால் ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா
பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் இந்த அதிசயத்தை நேரில்
பார்த்து வியந்தனர். மேலும் செல்போன், கேமராக்கள் மூலம் படம் எடுத்து
செல்கின்றனர்.
டைல்ஸ் பதித்த பகுதியை பக்தர்கள் தொட்டு தொட்டு
பார்த்தனர். இதனால் இயேசு, மாதா படங்கள் வரும் பகுதயை சர்ச்
நிர்வாகத்தினர் கண்ணாடியால் கவர் செய்தனர். இந்த அதிசய நிகழ்வு தொடர்ந்து
வண்ணம் உள்ளதால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரம்
விரைந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வைத்தியத்துறைக்கு 1.3571 Z வெட்டுப் புள்ளி களையும், பொறியியல் துறைக்கு 1.4474 Z வெட்டுப் புள்ளிகளையும், முகாமைத்துவ துறைக்கு 0.9093 Z வெட்டுப் புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
வணிகத்துறைக்கு 0.8813 Z வெட்டுப் புள்ளிக ளையும், சட்டத்துறை 1.7077 Z வெட்டுப் புள்ளி களையும் பெற்றிருக்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் மத்தியஸ்த சபைகளை நிறுவக் கோரிக்கை..!
மன்னார் மாவட்டத்தில் இவ்வளவு காலமும் மத்தியஸ்த சபைகள் இயங்காத
நிலையிலும் யுத்தத்தைக் காரணம்காட்டி இச்சபைகளின் நியமனங்கள் பலமுறையும்
ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக மன்னாரில் பல்வேறு பிணக்குகள்
தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றன. எனவே இனியும் காலதாமதமின்றி மேற்படி
சபைகளை உடன் அமைக்க நடவடிககை எடுக்குமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலரும்
சிரேஷ்ட ஊடகவியலாளருமான மக்கள் காதர் நீதி அமைச்சரைக் கேட்டுள்ளார்.
மன்னார் நகரம், நானாட்டான், முசலி மாந்தை, மடு உதவி அரசஅதிபர் பிரிவு என 5
வலயங்களிலும் மன்னார் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு
பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன. எனவே தற்போதைய புதிய
அமைச்சர்கள் இனிமேலும் காலதாமதம் செய்யாது, மத்தியஸ்த சபைக்குத்
தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று மாவட்டத்தில் சீரான நீதி
நிர்வாகம் நடைபெற வழியேற்படுத்த வேண்டும் என தனது வேண்டுகோளில் இவர்
வலியுறுத்தியுள்ளார்.
. Posted by
Mannar Net
அடிப்படை வசதியின்றி அல்லல் படும் மன்னார் மக்களை திரு. அடைக்கலநாதன் சந்தித்துள்ளார்.விபரங்களுக்கு.
10
0.02%
9
0.02%
4
0.01%
மன்னார் அகதிகளுக்கு பிரான்ஸ் முல்கவுசில் Mulhouse France நிதி திரட்டு! சென்ற ஆண்டு 2008 நத்தார் ஒளிவிழாவின் போது திரட்டப்பட்ட பணம் மன்னார் ஆயர் மூலமாக வன்னி அகதிகளுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொறு வருடம் மே மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமையில் முல்கவுஸில் வாழும் தமிழ் கத்தோலிக்க குடும்பங்களின் ஒன்றியத்தினால் காட்டுமாதா கோவிலில் மாதாவுக்காக விழா எடுப்பது வழக்கம் இந்த விழாவில் சேர்க்கப்படும் பணமும் கணிக்கைப்பணமும் மன்னார் ஆயர் மூலமாக அகதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இம்முறையும் 2009 ஒளிவிழா வில் திரட்டப்படும் பணம் மன்னார் ஆயர் மூலமாக அகதிகளுக்கு அனுப்பப் பட இருக்கின்றது. பெங்களூர் மறைமாவட்டத்தை சார்ந்த அருட்பணியாளர் அந்தோனிதாஸ் அவர்கள் இதனை வழிநடத்திவருகின்றார். அவருக்கு உதவியாக சில குடும்பமும் சிரமங்களுக்கு மத்தியில் உதவிபுரிந்து வருகின்றனர்.